இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்களால் லெபனானில் பதற்றமான சூழல்!

லெபனானில் ஹிஸ்புல்லா படையின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்களால் லெபனானில் பதற்றமான சூழல்!
கோப்புப்படம் | ஏபி

லெபனானில் ஹிஸ்புல்லா படையின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா-இஸ்ரேல் போரில் ஹமாஸுக்கு ஆதரவளித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா், இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனா்.

காஸாவில் ஹமாஸ் அமைப்பிற்கும், இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத படைக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான மோதல்கள் லெபனான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் ராணுவ ஆளில்லா விமானத்தை(டிரோன்) குறிவைத்து தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, லெபனானின் புடே மற்றும் பால்பெக் பகுதிகளிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் செயல்பாட்டு மையங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை இன்று(பிப்.26) தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா தரப்பு தெரிவித்துள்ளது.

காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், லெபனானில் இருந்து இயங்கி வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதப் படையினர் மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோசவ் கேலண்ட் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் ஹிஸ்புல்லா படையின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இதுவரை லெபனான் எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் அரங்கேறி வந்த நிலையில், லெபனானின் உள்புறப் பகுதிகளில் புகுந்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியிருப்பது போர்ப் பதற்றத்தை அதிகரித்திருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com