திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர்! பஞ்சாப் முதல்வராக மரியம் நவாஸ் பதவியேற்பு

News image
மரியம் நவாஸ்- படம் | ஏபி
Updated On :26 பிப்ரவரி 2024, 1:23 pm

DIN

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் மூத்த தலைவருமான மரியம் நவாஸ் இன்று(பிப்.26) பஞ்சாப் மாகாண முதல்வராகப் பதிவியேற்றார். இதன் மூலம், பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை மரியம் நவாஸுக்கு கிட்டியுள்ளது.

பாகிஸ்தானில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான பஞ்சாப் மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 327 தொகுதிகளில், மரியம் நவாஸ் தரப்பு பிஎம்எல் -என் கட்சி 137 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி சார்பில் சுயேட்சைகளாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள் மொத்தம் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி(பி.பி.பி), பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -கியூ(பி.எம்.எல்-கியூ) மற்றும் இஸ்டேகாம்-ஐ-பாகிஸ்தான் கட்சி(ஐபிபி) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார் மரியம் நவாஸ்.

Story image

50 வயதான மரியம் நவாஸ் தனது தந்தையும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள தனது சித்தப்பா ஷாபாஸ் ஷெரீப் ஆகியோரது முன்னிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வராகப் பதிவியேற்றார்.

இதைத் தொடர்ந்து உரையாற்றிய மரியம் நவாஸ், தனது தந்தை அலங்கரித்த பதவியில் தான் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

பஞ்சாப் மாகாணத்தின் ஒவ்வொரு பெண்ணும், பெண் முதல்வரைப் பார்த்து பெருமிதம் கொள்வதாகவும், இதே போல, பெண்கள் தலைமைப் பதவியேற்கும் சூழல் எதிர்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.