உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று -மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர்

இந்தியாவுடனான உறவை முறித்துக் கொள்வது சாத்தியமில்லை என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல்லா சாஹித் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்அப்துல்லா சாஹித் எக்ஸ்(டிவிட்டர்) தளப் பதிவு

இந்தியாவுடனான உறவை முறித்துக் கொள்வது சாத்தியமில்லை என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல்லா சாஹித் கூறியுள்ளார்.

மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்றது முதல், இந்தியா - மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாலத்தீவின் வெளியுறவுக் கொள்கைகளில் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் இந்தியாவுடனான உறவின் முக்கியத்துவம் குறித்தும், மாலத்தீவின் முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு குடியரசுக் கட்சியின்(எம்டிபி) தலைவரும், ஐ.நா. சபை முன்னாள் தலைவருமான அப்துல்லா சாஹித் பேட்டியளித்துள்ளார்.

அப்துல்லா சாஹித் கூறியிருப்பதாவது, மாலத்தீவின் வெளியுறவுக் கொள்கைகளில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மாற்றங்கள் கொண்டு வந்திருந்தாலும், இந்தியாவுடனான உறவை முறித்துக் கொள்வது சாத்தியமில்லை.

மாலத்தீவுடனான இந்தியாவின் உறவு, வரலாற்று ரீதியாக, கலாச்சார ரீதியாக மற்றும் பல்வேறு வழிகளில் நீடித்து வருகிறது. இந்நிலையில், புவியியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவிடமிருந்து தூரம் விலகிச் செல்வது இயலாத விஷயம்.

கடந்த 60 ஆண்டுகளாக உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியா அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தால், மாலத்தீவு பயன்பெறும் வகையிலான அனைத்து வழிகளையும் ஆராயும் விதத்தில் நமது கொள்கைகள் அமைய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

2004-ஆம் ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட பேரிடர் காலங்களில், மாலத்தீவுக்கு முதல் நாடாக உதவிக்கரம் நீட்டியது இந்தியா எனவும், கரோனா பெருந்தொற்று காலங்களில் இந்தியாவிலிருந்து கிடைத்த உதவிகள் எனப் பல்வேறு தருணங்களில் இந்தியாவுடனான உறவுகளை அவர் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com