காஸாவில் போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பம்: ஆனால்...
போர் நிறுத்தம் சாத்தியமா? - பிணைக்கைதிகள் விடுவிப்பு முக்கிய நிபந்தனை


காஸாவில் நடைபெற்றுவரும் ஹமாஸ் மீதான போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் உடன்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்துவரும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையில் சுமுக முடிவு எட்டப்பட்டால் பரஸ்பர கைதிகள் விடுவிப்பு, 6 வார காலம் தற்காலிக போர் நிறுத்தம் ஆகியவை நிறைவேறும்.

கான் யூனிஸில் இறந்த 4 வயது குழந்தையை அடக்கம் செய்யும் பாஸ்தீனர்கள்
மார்ச் 10-ம் தேதி ரமலான் மாதம் தொடங்கவுள்ளது.
திங்கள்கிழமை என்பிசி செய்தி நேர்காணலில் பைடன் இது குறித்து தெரிவித்தாவது, “ரமலான் நெருங்குகிறது. பிணைக்கைதிகளை வெளியே கொண்டுவர எங்களுக்கு நேரம் தரும் பொருட்டு இஸ்ரேலியர்கள் இந்த மாதத்தில் எந்த (போர்) நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோம் என ஒப்புக்கொண்டுள்ளனர்”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...