ஈரான் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்! அமெரிக்கா, இஸ்ரேல் காரணம்?

ஈரானில் நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்படுகிறது. 
ஈரான் தாக்குதலில் காயப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படுகிறது | PTI
ஈரான் தாக்குதலில் காயப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படுகிறது | PTI

ஈரானில் கடந்த புதன்கிழமை நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்காத நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என ஈரான் அதிபரின் அரசியல் ஆலோசகர் மொஹம்மட் ஜம்ஷிதி குற்றம் சாட்டியுள்ளார். 

ஈரானில் நடந்த இரட்டை குண்டிவெடிப்புத் தாக்குதலில் 84 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் உள்துறையமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸின் இரண்டாம் நிலைத் தளபதி லெபனானில் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், கடந்த டிசம்பரில் இஸ்ரேலுடன் தொடர்புடைய ஐந்து உளவாளிகளை ஈரான் தூக்கிலிட்டதாகத் தெரிவித்திருந்தது. 

இஸ்ரேல் மட்டுமல்லாமல், ஈரான் பல்வேறு இஸ்லாமிய போராட்டக் குழுக்களையும் எதிரிகளாகக் கொண்டுள்ளது. அந்த குழுக்களால் ஈரானில் பல தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளது. 

இஸ்ரேலின் உச்ச தலைவர் அயட்டோலா அலி காம்னெய் இது இஸ்லாமிய குடியரசின் எதிரிளால் நடத்தப்பட்ட தாக்குதல் எனக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

சௌதி அரேபியா, சிரியா, ஈராக், அமீரகம், மற்றும் ரஷியா போன்ற நாடுகள்  இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. 

1978-க்குப் பிறது ஈரானில் நடந்த பயங்கரமான தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com