நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஜெர்மனி: மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் பலி

ஜெர்மனியில் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப் படம்.
Updated On :5 ஜனவரி 2024, 11:07 am

DIN

ஜெர்மனியில் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வடக்கு ஜெர்மனியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் 4வது தளத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பல்வேறு அறைகளுக்கு பரவியது.

இச்சம்பவத்தைக் கண்ட அவசரகால பணியாளர்கள் மருத்துவமனையில் இருந்து அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். 

அதைத்தொடர்ந்து தீயை ஒருவழியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் 3 நோயாளிகள் சம்பவ இடத்தில் பலியாகினர். ஒருவர் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.