டிரம்புக்கு இந்தியா செலுத்திய தொகை இவ்வளவா... ஏன்?

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி நட்புறவின் பின்னணியில் இப்படி ஒரு காரணம் இருப்பதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மோடி மற்றும் டிரம்ப்
மோடி மற்றும் டிரம்ப்

டிரம்பின் தொழில் நிறுவனங்களுக்கு இந்தியா 7.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.65 கோடி) செலுத்தியுள்ளது.

‘வெள்ளை மாளிகை விற்பனைக்கு’ எனப் பெயரிடப்பட்ட அறிக்கையில் அமெரிக்க ஜனநாயக கட்சியின் மேற்பார்வைக்குழு உறுப்பினர்கள் டிரம்ப் மற்றும் அவரது தொழில் நிறுவனங்களுக்கு உலக நாடுகளில் இருந்து செலுத்தப்பட்ட தொகை விபரங்களைப் பட்டியலிட்டுள்ளனர்.

டிரம்ப் அதிபராக இருந்த 2017 முதல் 2020 இடைபட்ட ஆண்டுகளில் இந்தியா மட்டுமில்லாது 20 நாடுகள் டிரம்பின் நிறுவனங்களுக்கு தொகை செலுத்தியுள்ளன. 

இவை மிகச் சிறிய பகுதிதான் என்றும் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆட்சியில் இருந்த காலத்தில் பெற்ற தொகை அதிகமெனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியில் இருந்தபோது இந்திய பிரதமருடன் நல்லுறவில் இருந்தார். 

இந்தியாவில் இருந்து 2.6 லட்சம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் டவருக்கு  செலுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையிடத்திற்கு எதிரே அமைந்துள்ள டிரம்ப் டவரில் ஒரு பகுதி இந்தியாவால் 2004-ல் நிரந்தர தூதர் தங்குமிடத்திற்காக வாங்கப்பட்டது.

வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் 18,500 டாலர்கள் மூன்று முறை டிரம்ப் டவருக்கு 2017-ல் செலுத்தியதாகவும் ஆர்டிஐயில் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும், டிரம்ப் மேற்கொள்ளும் தொழில்திட்டங்கள் தெற்காசியாவிலேயெ இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

அமெரிக்காவின் வெளிநாட்டு தொழில்கொள்கைகளை மாற்றியமைத்து தனது வணிகத்தைப் பெருக்கிக் கொண்டதாக அறிக்கை டிரம்ப் மீது குற்றம் சாட்டுகிறது.

மோடியுடனான நட்புறவு இதனடிப்படையில் அமைந்திருக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com