விமான விபத்தில் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர், அவரது 2 மகள்கள் உள்பட 4 பேர் பலி

கரீபியன் தீவு அருகே ஏற்பட்ட விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர், அவரது இரண்டு மகள்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.
விமான விபத்தில் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர், அவரது 2 மகள்கள் உள்பட 4 பேர் பலி

பெர்லின் (ஜெர்மனி): கரீபியன் தீவு அருகே ஏற்பட்ட விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர், அவரது இரண்டு மகள்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.

'தி குட் ஜெர்மன்' 'ஸ்பீட் ரேசர்'மற்றும் 'வால்கெய்ரி' உள்ளிட்ட படங்களில் நடித்த மிகவும் பிரபலமான நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர், தனது 2 மகள்களுடன் ஒற்றை இன்ஜின் கொண்ட சிறிய ரக விமானத்தில் வியாழக்கிழமை பிற்பகல் கரீபியன் தேசமான செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸில் உள்ள சிறிய தீவான பெக்கியாவில் உள்ள ஜே.எஃப் மிட்செல் விமான நிலையத்திலிருந்து அண்டை நாடான செயின்ட் லூசியாவுக்கு சென்றுள்ளார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கரீபியன் தீவு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், கிறிஸ்டியன் ஆலிவர்(51), அவரது மகள்கள் மடிதா(12), அன்னிக்(10) மற்றும் விமானத்தின் உரிமையாளரும் விமானியுமான ராபர்ட் சாக்ஸும்  ஆகிய 4 பேரும் பலியாகினர்.

தகவல் அறிந்து செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் கடலோர காவல்படையினர், நீர்மூழ்கி வீரர்கள்,மீனவர்கள் தங்களது படகுகளில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 4 பேரையும் சடலமாகவே மீட்க முடிந்தது. 

“மீனவர்கள் மற்றும் நீர்மூழ்கி வீரர்களின் தன்னலமற்ற மற்றும் துணிச்சலான செயல்கள் மிகவும் பாராட்டத்தக்கவை,” என்று போலீசார் தெரிவித்தனர்.

விமானம் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜெர்மனியில் பிறந்த 51 வயதான நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர், 2008 ஆம் ஆண்டு திரைப்படமான "ஸ்பீட் ரேசர்" திரைப்படம் மற்றும் ஜார்ஜ் க்ளூனி மற்றும் ஸ்டீவன் சோடர்பெர்க்கின் 2006 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் திரைப்படமான "தி குட் ஜெர்மன்" திரைப்படம் உள்பட 12-க்கும் மேற்பட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com