/

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவானது

பாகிஸ்தானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :7 பிப்ரவரி 2024, 8:51 pm IST

பாகிஸ்தானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று (ஜன.11) பிற்பகல் 2.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. 

ஹிந்துகுஷ் மலைப்பகுதிகளில் 213 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.