பாகிஸ்தானில் போலியோ நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் போலியோ மருத்துவர் மற்றும் காவலர் பயணித்த வாகனம் தாக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வழியில் முகமறியாத கொலைக்காரர்கள் அவரைச் சுடத் தொடங்கியுள்ளனர்.
அவசர உதவி வாகனம், காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்தது. மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.
பாதுகாப்புக்கு உடன் பயணித்த காவலரும் தாக்கப்பட்டுள்ளார். அவர் திவீர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
பஜார் பழங்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் தரையில் பதிக்கப்பட்ட குண்டு வெடித்ததில் இருவர் பலியாகினர்.
போலியா மருத்துவர் உள்பட 7 காவலர்கள் அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த தாக்குதலில் பலியாகினர். அந்தத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.
இதையும் படிக்க: ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக 5 லட்சம் லட்டு அனுப்பி வைப்பு!
2012 முதல் இதுவரை போலியோ தொடர்புடைய 109 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மதம் சார்ந்த நம்பிக்கையின்பேரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதியில் போலியோ திட்ட பணியாளர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மோடி அரசின் கொள்கைகளால் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது: காங்கிரஸ்
தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!






