காஸா மீது ஓயாத தாக்குதல்களை நடத்தி பல்லாயிரக் கணக்கானோரைக் கொலை செய்த இஸ்ரேல், பிணைக்கைதிகளின் புகைப்படங்களைக் கொண்ட துண்டுப்பிரசுரங்களை வானிலிருந்து வீசியுள்ளது.
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் 69 பிணைக்கைதிகளின் புகைப்படங்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை கான் யூனிஸின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் வானிலிருந்து வீசியுள்ளது.
136 பிணைக்கதிகள் இன்னும் நாடுதிரும்பாத நிலையில், ஏறத்தாள 107 பேர் மட்டுமே உயிரோடிருக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரேல் கருதுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஈரான் - பாகிஸ்தான் விவகாரம்: எல்லைகள் திறப்பு
மேலும், அந்தப் பிரசுரங்களில் இஸ்ரேல் ராணுவத்தைத் தொடர்பு கொள்வதற்கான எண்களும் இடம் பெற்றுள்ளன. மேலும், 'நீங்கள் உங்கள் வீடுகளுக்கு திரும்பிச்செல்ல வேண்டும் என்றால், இந்தப் பிணைக்கைதிகள் பற்றிய தகவல்களை இஸ்ரேல் ராணுவத்திற்கு தெரிவியுங்கள்' என எழுதப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இரக்கமற்ற தொடர் தாக்குதல்களால் இதுவரை 24,927 பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்துள்ளது. 62,000த்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்வாரிய முறைகேடுகள் தொடா்பாக என் மீதான புகாா் அரசியல் உள்நோக்கம் கொண்டது: வி.செந்தில் பாலாஜி

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

