சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி; 40க்கும் மேற்பட்டோர் மாயம்

தென்மேற்கு சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 2 பேரி பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். 
(Photo | Special arrangement, China Xinhua News)
(Photo | Special arrangement, China Xinhua News)

தென்மேற்கு சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 2 பேரி பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். 

தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் திங்கள்கிழமை காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். மேலும் அப்பகுதியில் வசித்த 200க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

புதையுண்ட 47 பேரும் 18 வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்தவர்கள் என மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மாயமானவர்களில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 33 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 இயந்திரங்களுடன் 200க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

நிலச்சரிவில் மாயமானவர்களை முழுவதுமாக தேடி மீட்குமாறு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். நிலச்சரிவுக்கான காரணம் உடனடியாக தெரிவரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com