ரஷிய அதிபர் புதினுடன் பெலாரஸ் அதிபர் ஆலோசனை!

ரஷிய அதிபர் புதின் மற்றும் பெலாரஸ் அதிபர்  லூகாஷென்கோ ஆகிய இருநாட்டு தலைவர்களும், ரஷியாவின்  செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில்  ஆலோசனை நடத்தினர்.
பெலாரஸ் அதிபர் லூகாஷென்கோ மற்றும் ரஷிய அதிபர் புதின்
பெலாரஸ் அதிபர் லூகாஷென்கோ மற்றும் ரஷிய அதிபர் புதின்

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்(ரஷியா) : ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லூகாஷென்கோ ஆகிய இருநாட்டு தலைவர்களும், ரஷியாவின்  செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இன்று(ஜன.29) சந்தித்து இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது இருநாட்டு மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது பேசிய ரஷிய அதிபர் புதின், “வெளிநாட்டு அழுத்தத்தின் மத்தியில், ரஷியாவும் பெலாரஸும் சர்வதேச அரங்கில் நெருக்கமாக ஒத்துழைத்தன. 25 ஆண்டுகால ஒற்றுமை ஒப்பந்தத்தின்கீழ், ரஷியாவும் பெலாரஸும் ஒருவருக்கொருவர் உண்மையான நட்பு நாடுகளாக மாறாத ஆதரவை வழங்கி வருவதாக” தெரிவித்தார்.  

ரஷியாவின் தொடர் ஆதரவுடன் உள்நாட்டில் தனக்கெதிரான எதிர்ப்புக்கு மத்தியில், பெலாரஸ் அதிபராக அலெக்சாண்டர் லூகஷென்கோ பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக , பெலாரசின் எல்லைப் பகுதிகளை ரஷிய படைகள் பயன்படுத்திக் கொள்ள பெலாரஸ் அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.மேலும், பெலாரஸ் வழியாக உக்ரைன் எல்லையையொட்டிய பகுதிகளில், அணு ஆயுதங்களை ரஷிய ராணுவம் நிலைநிறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com