வைரலான பாடகியின் ஆபாச படம்: டீப் ஃபேக்கை எக்ஸ் தளம் கையாண்ட விதம்

டீப் ஃபேக் கொண்டு ஆபாச படங்கள் உருவாக்கப்படுவதும் பகிரப்படுவதும் சமூக வலைதளங்களுக்கு புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
டெய்லர் ஸ்விப்ட் | AP
டெய்லர் ஸ்விப்ட் | AP

எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விப்டின் டீப் பேக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆபாச படங்கள் வைரலானதைத் தொடர்ந்து அவர் தொடர்பான தேடல்களை முற்றிலும் தடை செய்தது எக்ஸ் தளம்.

டீப் பேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆபாசமாக மாற்றப்பட்ட பாடகியின் படங்கள் எக்ஸ் தளத்தில் வேகமாக பரவியது. அதனைக் கட்டுபடுத்த இந்த நடவடிக்கையை எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. 

உண்மை போலவே இருக்கும் படங்கள் செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்படுவதும் பகிரப்படுவதும், அடிக்கடி பிரபலங்கள் இதற்கு இலக்காவதும் தொடர்ந்துவருகிறது. சமூக வலைதளங்கள் எதிர்கொள்ளும் புதிய சிக்கலாக இது உருவெடுத்துள்ளது.

‘டெய்லர் ஸ்விப்ட் ஏஐ’ என்கிற வார்த்தை உள்ளிட்டு தேடும்போது எக்ஸ் தளம் அந்த உள்ளீடு தேடப்படுவதைத் தடை செய்துள்ளது. முன்னதாக ‘டெய்லர் ஸ்விப்ட்’ என்ற சொல்லும் தேடுதலில் தடை செய்யப்பட்டிருந்தது.

மற்ற சமூக வலைதளங்களைக் காட்டிலும் சுதந்திரமாக கருத்துகளைப் பதிவிடும் தளமாக எக்ஸ் உள்ளது. பதிவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் கட்டுபடுத்தப்படுவதை விரும்பாதவர், எலான் மஸ்க்.

இந்த நிலையில், அவரது தளத்தில் இதுபோன்ற ஆபாசமான படங்கள், காணொலிகள் பகிரப்படுவதைத் தடை செய்ய எக்ஸ் திணறியது பயனர்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com