
தெற்கு காஸா நகரமான கான் யூனிஸில் இஸ்ரேல் நள்ளிரவில் நடத்திய தாக்குதலில் 9 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளனது. அதற்கு முன்னர் நகரின் பகுதிகளில் இருந்து இடம்பெயர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல் ராணுவம்.
இடம்பெயர அறிவுறுத்தப்பட்ட பகுதியில் இருந்த ஐரோப்பிய மருத்துவமனைக்கு அருகில் உள்ள வீட்டில் நள்ளிரவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் பட்டியலில் மருத்துவமனை உள்ளடக்கப்படவில்லை என ராணுவம் தெரிவித்தது. மருத்துவமனை இயக்குநர் முன்னரே நோயாளிகள் அங்கிருந்து இடம்பெயர்ந்ததாக தெரிவித்தார்.
ஐநாவின் பாலஸ்தீன முகமை இயக்குநர் சாம் ரோஸ், காஸாவின் ஓட்டுமொத்த மக்கள்தொகையில் 10 சதவிகிதம் பேர் இந்த பகுதிகளில் இருக்கலாம் எனவும் அவர்களில் பலர் போரின் ஆரம்பத்தில் இடம்பெயர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் கூடுதலாக 50 ஆயிரம் பேர் இந்த வட்டத்துக்கு வெளியே உள்ளனர். தற்காலிக கூடாரங்களில் அடைகலம் தேடும் மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் கிடைப்பத்தில்லை எனவும் கூறப்படுகிறது.
இதுவரை இஸ்ரேல் ராணுவம் காஸாவில் நடத்திவரும் போரில் 37,900-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். அக்டோபரில் தொடங்கிய போர் 10-வது மாதமாக தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.