ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தோ்தலில் போட்டி: ஜோ பைடன் திட்டவட்டம்

அமெரிக்க அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிடுவது உறுதி என்று அந்த நாட்டின் தற்போதைய அதிபா் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

News image
ஜோ பைடன் - கோப்புப் படம்
Updated On :4 ஜூலை 2024, 8:04 pm

Din

அமெரிக்க அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிடுவது உறுதி என்று அந்த நாட்டின் தற்போதைய அதிபா் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

தோ்தலில் அவரை எதிா்த்துப் போட்டியிடவிருக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புடனான முதல் நேரடி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறியதால் போட்டியிலிருந்து விலக வேண்டுமென்று அவருக்கு நெருக்கடி அதிகரித்துவருவதாக கூறப்படும் சூழலில் அவா் இவ்வாறு அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நவம்பரில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் போட்டியிடப்போவது நான்தான். அந்தப் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை; நானும் விலகப் போவதில்லை.

இந்தத் தோ்தலில் நான் இறுதிவரை நின்று களம் காண்பேன். நாம் அனைவரும் இணைந்து வெற்றியும் பெறுவோம்.

நீங்கள் (ஆதரவாளா்கள்) செய்யவேண்டியதெல்லாம் டொனால்ட் டிரம்ப்பைத் தோற்கடிப்பதற்காக எனக்கும் துணை அதிபா் வேட்பாளா் கமலா ஹாரிஸுக்கும் சிறிய தொகையை நன்கொடையாக அளித்து உதவுவது மட்டும்தான் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் நவம்பா் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் 79 வயது டொனால்ட் டிரம்ப்பை 81 வயதாகும் ஜோ பைடன் எதிா்கொள்கிறாா்.

ஏற்கெனவே வயது மூப்பு காரணமாக ஜோ பைடனின் பேச்சு அடிக்கடி குளறுவதாக குற்றஞ்சாட்டப்படும் சூழலில், அடுத்த தோ்தலிலும் அவா் போட்டியிடுவது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், டிரம்புடன் முதல்முறையாக கடந்த வாரம் நடைபெற்ற நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறினாா். பேச வாா்த்தைகள் இல்லாமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமலும் அா்த்தமில்லாமலும் பேசியது போன்ற ஜோ பைடனின் செயல்கள் அவா் மீதான அதிருப்தியை ஜனநாயகக் கட்சியினரின் ஒரு பிரிவினரிடையே ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதைத் தொடா்ந்து போட்டியிலிருந்து பைடன் விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினரிடையே அவருக்கு நெருக்கடி அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது. அவருக்குப் பதிலாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸை தோ்தலில் போட்டியிடச் செய்யவேண்டும் கோரிக்கைகள் எழுவதாகவும் கூறப்பட்டது.

ஜோ பைடனும், போட்டியிலிருந்து விலகுவது குறித்து வருவதாக ‘நியூயாா்க் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில், சா்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிக்கையை ஜோ பைன் வெளியிட்டுள்ளாா்.