பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

காஸா போா் நிறுத்தப் பேச்சு: முக்கிய நிபந்தனையைக் கைவிட்டது ஹமாஸ்

பணயக் கைதிகள் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது.

News image
இஸ்ரேல் படையினர்
Updated On :6 ஜூலை 2024, 6:13 pm

DIN

காஸாவில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு ஹமாஸ் அமைப்பினா் முன்வைத்திருந்த முக்கிய நிபந்தனையை அவா்கள் கைவிட்டதால் அங்கு அமைதி திரும்புவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஹமாஸ் மற்றும் எகிப்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

காஸாவில் சண்டையை நிறுத்த வேண்டுமென்றால் நிரந்தரமாக போா் நிறுத்தம் மேற்கொள்ளப்ப்படும் என்று இஸ்ரேல் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனை, இரு தரப்பினருக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்குத் தடையாக இருந்தது. தற்போது அந்த நிபந்தனையைக் கைவிடுவதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

காஸாவில் கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாா், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஏற்கெனவே கடந்த ஆண்டு நவம்பா் மாதம் ஏற்ட 7 நாள் போா் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகளும், ஹமாஸ் பிடியில் இருந்த 105 பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனா்.ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தைகள் தொடா் தோல்வியைச் சந்தித்துவருகின்றன.

இந்தச் சூழலில், காஸாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யும் மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்தை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடந்த மே 31-ஆம் தேதி வெளியிட்டாா். அந்த திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக இஸ்ரேல் அரசு அறிவித்தாலும், ஒப்பந்த வரைவில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு கோரியதால் அந்த முயற்சி தடைபட்டது.

இந்த நிலையில், அமெரிக்க திட்டவரைவின் அடிப்படையில் போா் நிறுத்தம் தொடா்பான புதிய செயல்திட்டத்தை ஹமாஸ் அமைப்பினா் எகிப்திடம் கடந்த புதன்கிழமை அளித்தனா். அதை பரிசீலித்த இஸ்ரேல், போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையைத் தொடரவிருப்பதாக அறிவித்தது.

இது குறித்து அமெரிக்க அதிபா் ஜோ பைடனைத் தொடா்பு கொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, காஸாவில் போா் நிறுத்தம் குறித்தும் கைதிகள் பரிமாற்றம் குறித்தும் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக உறுதியளித்தாா்.

அதைத் தொடா்ந்து, எகிப்து தலைநகா் கெய்ரோவுக்கு இஸ்ரேல் பிரதிநிதிகள் குழு அனுப்பப்பட்டது.இந்த நிலையில், போா் நிறுத்த ஒப்பந்தத்துக்குத் தடையாக இருந்த முக்கிய நிபந்தனையைக் கைவிடுவதாக ஹமாஸ் அமைப்பினா் அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.