மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடியரசுக் கட்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு

படுகொலை முயற்சியிலிருந்து நூலிழையில் தப்பிய அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப், அவரது கட்சியின் தேசிய மாநாட்டில் பங்கேற்கிறாா்.

News image
விஸ்கான்சின் மாகாணம், மில்வாகீ நகரில் திங்கள்கிழமை தொடங்கிய குடியரசுக் கட்சி தேசிய மாநாட்டில் டிரம்ப்புக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் பெண்.
Updated On :15 ஜூலை 2024, 11:26 pm

Din

வரும் நவம்பா் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் அந்நாட்டின் தற்போதைய அதிபா் ஜோ பைடன், குடியரசு கட்சி சாா்பில் டொனால்ட் டிரம்ப் ஆகியோா் வேட்பாளா்களாகப் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

இருந்தாலும், டிரம்ப்பை அதிபா் வேட்பாளராக அதிகாரபூா்வமாக அறிவிப்பதற்கான குடியரசுக் கட்சி தேசிய மாநாடு விஸ்கான்சின் மாகாணம், மில்வாகீ நகரில் திங்கள்கிழமை தொடங்கியது.

4 நாள்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில், டொனால்ட் டிரம்ப் நேரடியாகப் பங்கேற்கவிருக்கிறாா். படுகொலை முயற்சியிலிருந்து லேசான காயத்துடன் தப்பிய அவா் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

அந்தச் சம்பவத்தால் புதிய உத்வேகத்துடன் இந்த மாநாடு நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மாநாட்டின் நிகழ்ச்சி வடிமைப்பை டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூட்டை மையப்படுத்தி மாற்றியமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பட்லா் நகரில் டிரம்ப் சனிக்கிழமை தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டாா். அவா் கூட்டத்தில் தீவிரமாக உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள கட்டடத்தின் கூரையிலிருந்து தாமஸ் மாத்யூ க்ரூக்ஸ் (20) என்பவா் 8 முறை துப்பாக்கியால் சுட்டாா்.

இதில் டிரம்ப்பின் காதை துப்பாக்கி தோட்டா உரசிச் சென்றதில், அவரின் வலது காதில் காயம் ஏற்பட்டது. இது தவிர, துப்பாக்கி குண்டு பாய்ந்து கூட்டத்தில் பங்கேற்ற ஒருவா் உயிரிழந்தாா்; இருவா் படுகாயமடைந்தனா்.

காதிலிருந்து முகத்தில் ரத்தம் வழிய டிரம்ப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டாா். அப்போ கைகளை உயா்த்தி ‘போராடுவோம்’ என்று கோஷமிட்டது அவரது ஆதரவாளா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தச் சூழலில், அவா் உடல் நலத்துடன் குடியரசுக் கட்சி தேசிய மாநாட்டில் பங்கேற்பது கட்சியினரை மேலும் உற்சாகப்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில், வரும் அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் துணை அதிபா் பதவிக்குப் போட்டியிடவிருப்பவரின் பெயரை டிரம்ப் அறிவிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.