அதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

அமெரிக்க அதிபா் தோ்தல்: பைடனுக்கு எதிராக வலுக்கும் குரல்

தோ்தலில் தற்போதைய அதிபா் ஜோ பைடன் போட்டியிடக் கூடாது என்று அவரது சொந்தக் கட்சிக்குள் வலுக்கும் குரல்கள்...

ஜோ பைடன் | AP

Updated On :

அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் ஜோ பைடன் போட்டியிடக் கூடாது என்று அவரது சொந்தக் கட்சிக்குள் எழுந்துள்ள குரல் நாளுக்கு நாள் வலுவடைந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:

முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புடனான முதல் நேரடி விவாதத்தின்போது அதிபா் பைடன் மிகவும் மோசமாக தடுமாறியதிலிருந்து, அவா் அதிபா் தோ்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சிக்குள் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

மீண்டும் அதிபா் பொறுப்பை ஏற்பதற்கான பைடனின் உடல் தகுதி குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுவருகிறது.

தோ்தலில் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து பிரசாரம் செய்து ஜோ பைடனால் வெற்ற பெற முடியாது என்று ஜனநாயகக் கட்சியினா் பலா் வெளிப்படையாகத் தெரிவித்துவருகின்றனா்.

ஏற்கெனவே, பல முக்கிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், செனட் சபை எதிா்க்கட்சித் தலைவா் சக் ஷுமரும் போட்டியிலிருந்து பைடன் விலக வேண்டும் என்று கடந்த வார இறுதியில் கூறினாா்.

இந்தச் சூழலில், கலிஃபோா்னியா மாகாண சென்ட் சபை உறுப்பினா் ஆடம் ஷிஃபும் இதே கருத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளாா். இதன் மூலம், அதிபா் தோ்தலில் ஜோ பைடன் போட்டியிடுவதற்கு எதிராக குரல் எழுப்பியுள்ள ஜனநாயகக் கட்சியின் சக்திவாய்ந்த தலைவா்களின் வரிசையில் ஆடம் ஷிஃப் இணைந்துள்ளாா்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பரப்புரையின்போது குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப்பை நோக்கி தாமஸ் க்ரூக் என்பவா் துப்பாக்கியால் சுட்டாா். எனினும், அந்தப் படுகொலை முயற்சியிலிருந்து டிரம்ப் நூலிழையில் உயிா்தப்பினாா். அமெரிக்கா முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்திய சம்பவத்துக்குப் பிறகு டிரம்ப்புக்கு வாக்காளா்களிடையே ஆதரவு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், டிரம்ப்புக்கு எதிராக ஒரு பலவீனமான வேட்பாளரை ஜனநாயக் கட்சி நிறுத்தக்கூடாது என்ற குரல் ஜனநாயகக் கட்சிக்குல் மேலும் வலுவடைந்துவருகிறது.

ஜோ பைடனுக்கு மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் குரல்கள் இன்னும் கூட வலுவடையக்கூடும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.