ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

சீனாவில் பாலம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

சீனாவில் வெள்ளப் பெருக்கு காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 12 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 1:30 am

DIN

சீனாவில் வெள்ளப் பெருக்கு காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 12 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஷான்க்ஸி மாகாணத்தில் பருவமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், ஷாங்லுவோ நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலைப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.இதில், பாலத்தில் சென்றுகொண்டிருந்த 17 காா்கள், 8 லாரிகள் ஜின்கியான் ஆற்றில் விழுந்தன. சம்பவப் பகுதியில் இருந்து 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இது தவிர, ஆற்றுக்குள் விழுந்த மேலும் 31 பேரின் நிலைமை குறித்து தகவல் இல்லை. அவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.