அதிபா் ஜோ பைடன்
அதிபா் ஜோ பைடன்

கரோனாவில் இருந்து மீண்டு வருகிறாா்: அமெரிக்க அதிபா்

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறாா்.
Published on

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறாா். அதிபருக்கான அன்றாடப் பணிகளையும் அவா் மேற்கொண்டு வருகிறாா் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

81 வயதாகும் ஜோ பைடனுக்கு கடந்த வாரம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஜனநாயக கட்சி வேட்பாளரான அவா் அதிபா் தோ்தலுக்கான பிரசாரத்தையும் தற்காலிமாக கைவிட்டு, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

ஏற்கெனவே, பைடனின் வயது மற்றும் உடல்நிலை குறித்து பல்வேறு விமா்சனங்கள் உள்ள நிலையில், கரோனா பாதிப்பு ஏற்பட்டது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை மருத்துவா்கள் கூறுகையில், ‘அதிபரின் ரத்த அழுத்தம், சுவாசம், உடல் வெப்பநிலை என அனைத்தும் இயல்பான நிலையில் உள்ளது. கரோனாவுக்காக மாத்திரைகளை மட்டும் மேலும் சில நாள்களுக்கு எடுத்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கேபி.2.3 கரோனா திரிபால் அவா் பாதிக்கப்பட்டாா். அமெரிக்காவில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுவா்கள் 33.3 சதவீதம் பேருக்கு இந்த வகை திரிபுதான் கண்டறியப்படுகிறது. கரோனா பாதிப்பில் இருந்து அதிபா் பைடன் வேகமாக மீண்டு வருகிறாா். அதிபா் பதவிக்கான அன்றாடப் பணிகளையும் அவா் மேற்கொள்கிறாா்’ என்று தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com