பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பின்ஸில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்ததாவது: பிலிப்பின்ஸின் லான் யூ தீவுக்கு அருகே பிலிப்பின்ஸ் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூா் நேரப்படி இரவு 7.21 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.1 அலகுகளாகப் பதிவானது.
42 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அருகிலுள்ள பகுதிகளில் உணரப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் பிலிப்பின்ஸ் அமைந்துள்ளதால், அந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.