
உக்ரைனிய அதிபர் ஸெலென்ஸ்கியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி.
அதிபர் ஸெலென்ஸ்கியை குறிப்பிட்டு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, “பிராந்தியங்களில் அனைவருக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு உருவாக இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” எனத் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக ஸெலென்ஸ்கி, “உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் வெற்றியை தக்கவைத்ததை வரவேற்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மற்றும் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக தொடர் வெற்றியை இந்திய பாராளுமன்ற தேர்தலில் பெற்றுள்ளது. இந்திய மக்களுக்கு அமைதி மற்றும் செழிப்பு கிடைக்க விரும்புகிறேன். நமது நாடுகளுக்கிடையான நட்புறவு தொடருமென எதிர்பார்க்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.