
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று(ஜூன் 25) நடைபெற்ற சூப்பர் 8 சுற்றுப் போட்டியில், வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து, மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி(டிஎல்எஸ்) 114 ரன்கள் என்ற எளிய இலக்குடன் பேட்டிங் செய்த வங்கதேசம், ஆப்கானிஸ்தானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் 17.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம், டி20 உலகக்கோப்பை அரையிறுதிச் சுற்றுக்குள் முதன்முறையாக நுழைந்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் அணியின் வெற்றியை படு உற்சாகமக கொண்டாடி வருகின்றனர். ஆப்கனிஸ்தானின் ஜலாலாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மக்கள் வெள்ளத்தால் விழாக்கோலம் பூண்டுள்ளன. அங்கு சாலைகளிலும், கட்டடங்களின் மொட்டைமாடிகளிலும் திரண்ட ஏராளமான மக்கள் ஆர்ப்பரித்தபடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.