/

ஜப்பான் ஃபுகுஷிமாவில் நிலநடுக்கம்

ஜப்பான் ஃபுகுஷிமாவில் நிலநடுக்கம்

News image
Updated On :15 மார்ச் 2024, 6:14 pm

ஜப்பானின் வடகிழக்கே அமைந்துள்ள ஃபுகுஷிமா பிராந்தியத்தில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் விபத்தைச் சந்தித்த அணு மின் நிலையத்துக்கு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. எனினும், பழைய விபத்தால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணு உலையிலிருந்து கதிா்வீச்சு குறைக்கப்பட்ட நீரை வெளியேற்றும் பணி இந்த நிலநடுக்கத்தின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது.