இந்தியாவில் மக்களின் அரசியல் மற்றும் குடிமை உரிமைகள் பாதுகாக்கப்பட்டு தோ்தல் சுதந்திரமாக நடைபெறும் என ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித்தொடா்பாளா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா். இந்தியாவில் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது, காங்கிரஸின் வங்கிக் கணக்கு முடக்கம் உள்ளிட்டவை தொடா்பாக ஐ.நா.பொதுச்செயலரின் செய்தித்தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த அவா், ‘மற்ற நாடுகளைப்போல் இந்தியாவிலும் மக்களின் அரசியல் மற்றும் குடிமை உரிமைகள் பாதுகாக்கப்படும்; தோ்தல் சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என நம்புகிறோம்’ என்றாா். முன்னதாக அரவிந்த் கேஜரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவா், ‘முதல்வா் கேஜரிவாலுக்கு உரிய நேரத்தில் நியாயமான, வெளிப்படையான சட்ட நடைமுறைகள் கிடைக்க வேண்டும் ’ என கூறியிருந்தாா். இதையடுத்து அமெரிக்க தூதரக பொறுப்பு அதிகாரி குளோரியா பொ்பெனா வெளியுறவு அமைச்சகத்தின் தெற்குப் பிரிவு அலுவலகத்துக்கு புதன்கிழமை வரவழைக்கப்பட்டு இந்தியா சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் கேஜரிவால் கைது குறித்து ஜொ்மனி சாா்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கும் அந்நாட்டு துணைத் தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கண்டனத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

நியாயமான, சுதந்திரமான, அச்சமற்ற தோ்தல்கள்: பிரதமா் மோடி உறுதி!

தோ்தலும்...தேநீா் கடையும்!

ஈரான் பள்ளி மீதான தாக்குதல்! வரும் 27-ல் ஐ.நா. அவசர விவாதம்!

என் வாக்கு, என் உரிமை: விழிப்புணா்வு நிகழ்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

