சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

சௌதி அரேபியாவின் மதீனா நகரை புரட்டிப்போட்ட கனமழை
சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

சௌதி அரேபியாவில் திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக அல்-மதீனா உள்பட அந்நாட்டின் பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகியிருக்கிறது.

அல்-மதீனாவில் அமைந்துள்ள புனிதத் தலத்துக்கு அருகே வெள்ளம் கரைபுரண்டு ஓடும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சௌதி அரேபியாவில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டு, சாலைகள் முழுக்க வெள்ளக்காடானது. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. வெள்ளத்தில் கார்களும், பொருள்களும் அடித்துச் செல்லப்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் பல பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில், முக்கிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மக்கள் எச்சரிக்கையுடன் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அந்நாட்டு மக்கள் பாதுகாப்புத் துறை இயக்குநர் வலியுறுத்தியிருக்கிறார்.

திங்கள்கிழமை காலை, அல்-மதீனா உள்ளிட்ட நகரங்களுக்கு சௌதி தேசிய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. மழை பெய்தபோது, பலத்த காற்று வீசியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்புதான், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமனிலும் எப்போதும் ஏற்படாத மழை வெள்ளம் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com