பாகிஸ்தான்: பேருந்து விபத்தில்
20 போ் உயிரிழப்பு

பாகிஸ்தான்: பேருந்து விபத்தில் 20 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து, பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் 20 போ் உயிரிழந்தனா்.

வடமேற்கு பாகிஸ்தானின் கில்ஜித் பலிஸ்தான் பிராந்தியத்தில் இந்த விபத்து வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது. ராவல்பிண்டியிலிருந்து ஹுஞ்சா என்ற இடத்தை நோக்கிச் சென்ற பேருந்தில் 43 பயணிகள் இருந்தனா். மலைப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தாக்கில் உருண்டு சிந்து நதிக் கரையில் விழுந்தது.

இந்த விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

உயிரிழந்தோா் குடும்பத்துக்கு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com