பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

இஸ்ரேலைச் சேர்ந்த பிணைக்கைதிகளில் ஒருவர் மரணம்: ஹமாஸ் கைதிகளின் நிலை?
அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் இஸ்ரேலிய ஆதரவு போராட்டத்தில் இஸ்ரேல் கொடியை ஏந்திய நபர்
அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் இஸ்ரேலிய ஆதரவு போராட்டத்தில் இஸ்ரேல் கொடியை ஏந்திய நபர்ஏ.பி.

ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடியில் உள்ள பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

அக்.7 இஸ்ரேல் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் படையினர் நூற்றுக்கணக்கில் இஸ்ரேலியர்களைப் பிணைக்கைதிகளாகக் கடத்திச் சென்றனர்.

அப்படி கடத்திச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதை இஸ்ரேலிய அரசு வியாழக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அவரின் உடல் காஸாவில் உள்ளதாக தெரிவித்த அரசு எப்போது இறந்தார் என்பது குறித்த விவரங்களை அளிக்கவில்லை. இஸ்ரேலுக்கு இந்த தகவல் எப்படி தெரியவந்தது என்பது குறித்தும் விளக்கம் இல்லை.

அவரின் மனைவி அக்.7 தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். மூன்று குழந்தைகளில் இருவர் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

நவம்பர் மாதத்தில் ஒரு வாரக்கால போர் நிறுத்தத்தின் போதான கைதிகள் விடுதலையில் இறந்தவரின் 13 வயது பெண்ணும் 17 வயது ஆணும் விடுவிக்கப்பட்டனர்.

இஸ்ரேல் செய்தி நிறுவனம், பீரி கிபூட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் எனவும் அக்.7 தாக்குதலில் 49 வயதான அவர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடத்திச் செல்லப்பட்ட 250 பேரில் 105 பேர் நவம்பரில் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல், ஹமாஸ் பிடியில் இன்னும் 100 பேர் பிணையில் இருப்பதாக கருதுகிறது.

ஆனால் பிணையில் உள்ளவர்களில் கணிசமானோர் இறந்திருக்கலாம் என தற்போது அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com