அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

லெபனானில் டிரோன் தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :9 மே 2024, 4:25 pm

DIN

லெபனான் எல்லையில் ஒரு காரின் மீது, இஸ்ரேல் டிரோன் மூலமாக தாக்குதல் நடத்தியதில் 4 பேர் உயிரிழந்ததாக லெபனான் உள்நாட்டு பாதுகாப்புக் குழு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- லெபனான் எல்லைக்கு அருகிலுள்ள லெபனானிய கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. உயிரிழந்த நால்வர் ஹிஸ்புல்லா ஆயுத படையைச் சேர்ந்தவர்களா என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.

அக்.7 போர் தொடங்கியது முதல் இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஈரானிய ஆதரவு படையான ஹிஸ்புல்லாக்களுக்குமே இடையே மோதல் வெடித்து வருகிறது.

இதுவரை லெபனானில் 275 ஹிஸ்புல்லா படையினர் உள்பட 350 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 15 ராணுவ வீரர்கள், 10 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

வெளிநாட்டு அதிகாரிகள் லெபனானுக்கு கடந்த சில மாதங்களாக அமைதி பேச்சுவார்த்தைக்காக வந்தவண்ணம் உள்ளனர். ஹிஸ்புல்லா படையினர், காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படும்வரை சண்டை ஓயாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.