சென்னையிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்: நாசா

சென்னையிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது.
NASA
NASA

சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இன்றிரவு 7 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பூமியில் இருந்தபடியே வெறும் கண்களால் பாரக்க முடியும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தெரிவித்துள்ளது.

எந்தெந்த பகுதிகளிலிருந்து நாசாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்றிரவு வெறும் கண்களால் பார்க்க முடியும் என்ற அறிவிப்பினை நாசா வெளியிட்டுள்ளது.

சென்னையிலிருந்தே இந்த நிகழ்வு தெரியும் என்பதால், மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இன்றிரவு 7.09 மணியிலிருந்து 7 நிமிடங்களுக்கு வானில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் பல்வேறு நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியை சுற்றி வருகிறது. சர்வதேச விண்வெளி மையம் குறிப்பிட்ட பகுதியில் வானில் தெரியும் நேரம் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டு வருகிறது.

பொதுவாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வான்வெளி தெளிவாக இருக்கும்போது மட்டும் நகர்ந்துகொண்டிருக்கும் சிறிய ஒளிப் புள்ளியாக விண்வெளி ஆய்வு மையத்தை மனிதர்களால் வெறும் கண்களால் பார்க்க முடியும். இந்த நிலையில்தான் சென்னையிலிருந்து வெறும் கண்களால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்றிரவு பார்க்க முடியும் என்று நாசா அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com