கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்!

அஸ்கெலோனில் ஏவுகணை தாக்குதல்: 3 பேர் காயம்

News image
ஏவுகணை தாக்குதல் (கோப்புப் படம்)- ஏபி
Updated On :12 மே 2024, 10:54 am

DIN

இஸ்ரேல் கடற்கரை நகரமான அஸ்கெலோனில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் மீது காஸா பகுதியிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காஸாவின் வடக்குப் பகுதியில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள இந்த பகுதியில் நள்ளிரவில் நடந்த தாக்குதலில் 3 பேர் காயமுற்றதாக இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் சமீபத்தில் இஸ்ரேல் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதலை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலின் கரீம் சலோம் எல்லைப் பகுதியும் சனிக்கிழமை தாக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. காஸாவுக்குள் நிவாரண உதவிகள் கொண்டுவர பயன்படுத்தப்பட்ட இந்த எல்லைப் பகுதி மீது நான்கு கணைகள் ஏவப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்றை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து தகர்த்ததாகவும் வாழ்விடமில்லாத இடங்களான இவற்றில் ஏவுகணை விழுந்ததால் பெரிய உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் காஸாவின் தெற்குப் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் இந்தத் தாக்குதல்களை தொடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.