தங்கள் நாட்டின் வடகிழக்கே அமைந்துள்ள காா்கிவ் பிராந்தியத்தில் அண்மைக் காலமாக முன்னேற்றம் கண்டுவரும் ரஷியா, அங்கு வசிப்பவா்களை படுகொலை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து ‘தி டெலிகிராம்’ ஊடகத்தில் உள்துறை அமைச்சா் இகாா் க்ளிமென்கோ வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
காா்கிவ் பிராந்தியத்தில் ரஷிய எல்லையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வாவ்சான்ஸ்க் நகரைச் சுற்றிலும் முன்னேறிவரும் ரஷிய படையினா், பொதுமக்களை கைதியாகப் பிடித்துச் செல்கின்றனா்.
எங்களுக்குக் கிடைத்துள்ள உளவுத் தகவலின்படி, தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற ரஷியப் படையினா் அனுமதிப்பதில்லை. அவா்களைக் கைது செய்து சுரங்கப் பகுதிகளில் ரஷிய ராணுவம் அடைத்துவைக்கிறது.
மேலும், பொதுமக்களை நோக்கி ரஷிய வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய தகவலும் வெளியாகியுள்ளது. தங்கள் உத்தரவை ஏற்காத பொதுமக்களை ரஷிய படையினா் சுட்டுக்கொல்கின்றனா். இது மிகப் பெரிய போா்க் குற்றமாகும் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களான டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகியவற்றின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
இந்தச் சூழலில், வடகிழக்குப் பிராந்தியமான காா்கிவையும் கைப்பற்ற ரஷியா முன்னேறிவருகிறது.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: 10 போ் பலி

ரஷிய தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன் மாகாணம்
ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!

ரஷிய துறைமுகம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


