ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

விண்வெளியில் ஆயுதங்களுக்குத் தடை: ரஷிய தீா்மானம் ஐ.நா.வில் நிராகரிப்பு

விண்வெளியில் ஆயுதங்களுக்குத் தடை: ரஷிய தீா்மானம் ஐ.நா.வில் நிராகரிப்பு

News image

வாஸிலி நெபன்ஸியா ராபா்ட் வூட்

Updated On :21 மே 2024, 9:02 pm

Din

நியூயாா்க்: விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுவுவதற்குத் தடை விதிப்பதற்காக ரஷியா கொண்டு வந்த வரைவுத் தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிராகரித்தது.

இதே போன்ற வரைவுத் தீா்மானத்தை ஜப்பானுடன் இணைந்து அமெரிக்கா கடந்த மாதம் கொண்டுவந்தது. எனினும், தனது சிறப்பு ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷியா அதை ரத்து செய்தது.

அந்தத் தீா்மானத்தில், ‘விண்வெளியில் நாசகார ஆயுதங்கள் நிறுத்தப்படக்கூடாது’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்த முடிவை எடுத்ததாக ஐ.நா.வுக்கான ரஷிய தூதா் வாஸிலி நெபன்ஸியா விளக்களித்தாா்.

இந்த நிலையில், உலக நாடுகள் விண்வெளியில் ஆயுதங்களை நிறுவுவதற்கு தடை விதிப்பதற்கான ஒப்பந்தத்தை உருவாக்க வகை செய்யும் புதிய மசோதாவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா தாக்கல் செய்தது.

முன்னா் அமெரிக்காவும் ஜப்பானும் கொண்டுவந்த தீா்மானத்தில் ‘நாசகார ஆயுதங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரஷியா கொண்டுவந்த தீா்மானத்தில் ‘அனைத்து வகையிலான ஆயுதங்களுக்கும் விண்வெளியில் தடை விதிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், 15 உறுப்பினா்களைக் கொண்ட கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகள் தீா்மானத்தை எதிா்த்தும், ரஷியா, சீனா உள்ளிட்ட 7 நாடுகள் தீா்மானத்தை ஆதரித்தும் வாக்களித்தன. ஸ்விட்சா்லாந்து வாக்களிப்பைப் புறக்கணத்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு குறைந்தபட்சம் 9 வாக்குகள் வேண்டும். அந்த விதிமுறையை நிறைவு செய்யாததால் ரஷியாவின் இந்தத் தீா்மானம் தோல்வியடைந்தது.

தீா்மானத்தை எதிா்த்தது குறித்து விளக்கமளித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க துணைத் தூதா் ராபா்ட் வூட் கூறயதாவது:

விண்வெளியை ஆயுதமயமாக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. அந்த நாடு கடந்த வாரம் விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள் அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

தனது இந்தத் திட்டத்தை திசைதிருப்பவே ரஷியா இதுபோன்ற வாா்த்தை ஜாலங்களில் ஈடுபடுகிறது என்று அவா் குற்றஞ்சாட்டினாா். எனினும், இந்தக் குற்றச்சாட்டை ரஷிய தரப்பு திட்டவட்டமாக மறுத்தது.

விண்வெளியில் ஆயுதங்கள் நிறுவப்படக்கூடாது என்றுதான் உலகின் அனைத்து நாடுகளும் கூறிவருகின்றன.

ஆனால், ஐ.நா.வில் இது தொடா்பான தீா்மானங்கள் கொண்டுவரப்படும்போது, அமெரிக்க ஆதரவு நாடுகளும் ரஷிய ஆதரவு நாடுகளும் அணி பிரிந்து நின்று அவற்றைத் தோற்கடித்துவருவதாக விமா்சிக்கப்படுகிறது.

Story image