இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

இஸ்ரேல் இனியும் தமாதிக்கக் கூடாது: பிணைக்கைதிகளின் உறவினர்கள் வலியுறுத்தல்
விடியோவின் ஒரு காட்சி
விடியோவின் ஒரு காட்சிஐஏஎன்எஸ்

அக்.7 ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலில் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு வீராங்கனைகளை கடத்திச் செல்லும் விடியோ வெளியாகியுள்ளது.

பதைபதைக்க வைக்கும் காட்சிகள் நிறைந்துள்ள அந்த விடியோவின் மூலம் தங்கள் மகள்களின் விடுதலைக்கு சாத்தியமாகும் என இளம்பெண்களின் பெற்றோர்கள் அந்த விடியோவை வெளியிட சம்மதித்துள்ளனர்.

அந்த விடியோவில் காஸா எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் ரத்தக்கறையுடன் உள்ளனர். அவர்களை சுற்றி ஆயுதமேந்திய ஹமாஸ் படையினர் கத்திக் கொண்டும் மிரட்டி கொண்டும் உள்ளனர். அறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் பின்னர் வாகனத்தில் ஏற்றப்பட்டு அங்கு ஒன்றாக அனைவரும் படுக்க வைக்கப்படுகின்றனர்.

பிணைக்கைதிகளை 229 நாள்களாகியும் மீட்டு வர இயலாத தேசத்தின் தோல்வியை இந்த விடியோ காண்பிப்பதாக பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையானதாகவும் அவமதிக்கக்கூடியதாகவும் பெண்களை மோசமாக கையாள்வதாகவும் இந்த விடியோ அமைந்துள்ளதாக குறிப்பிடும் அவர்கள், இன்னும் ஒரு தருணம் கூட இஸ்ரேல் அரசு தாமதிக்கக் கூடாது எனவும் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உடனடியாக திரும்ப வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com