
பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 2,000-க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக அந்நாடு பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலச்சரிவில் கட்டடங்கள், விவசாய நிலங்கள் அழிந்ததுடன், வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அருகே ஓஷியானா மண்டலத்தில் அமைந்துள்ள நியூ கினியா தீவின் கிழக்குப் பகுதியையும் மெலனீசிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு பப்புவா நியூ கினியா.
மலைப் பாங்கான அந்த நாட்டின் எங்கா மாகாணத்தில், தலைநகா் போா்ட் மோா்ஸ்பிக்கு சுமாா் 600 கி.மீ. தொலைவிலுள்ள காவ்கலாம் கிராமம் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு (உள்ளூா் நேரம்) நிலச்சரிவில் புதையுண்டது. இது தவிர, மாய்ப் முரிடாகா மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 6 கிராமங்கள் இந்த நிலச்சரிவில் நாசமாகின.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வந்ததாகவும் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது வரை நிலச்சரிவில் 670 பேர் உயிரிழந்ததாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.