சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காஸாவில் இன்னும் 7 மாதங்களுக்குப் போர் தொடரும்: இஸ்ரேல் எச்சரிக்கை!

காஸாவில் இன்னும் 7 மாதங்கள் போரிட இஸ்ரேலின் திட்டம்!

News image
இஸ்ரேல் ராணுவம்- ஏபி
Updated On :30 மே 2024, 3:06 pm

DIN

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் ஏழாவது மாதமாக தொடர்ந்துவரும் நிலையில் இன்னும் ஏழு மாதங்கள் நீடிக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

லட்சக்கணக்கான மக்கள் காஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து தஞ்சமடைந்துள்ள ராஃபாவில் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை விரிவாக்கியதையடுத்து அங்கிருந்து மக்கள் இடம்பெயர்ந்தனர்.

காஸா நகரின் மத்தியில் முதல்முறையாக டாங்கிகளும் இஸ்ரேலின் தளவாடங்களும் தென்பட்ட நிலையில் இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தாச்சி ஹனேபி, “2024-ம் ஆண்டின் 5-வது மாதத்தில் இருக்கிறோம். ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத்களின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை முற்றிலும் அழிக்கும் இலக்கை அடைய இன்னும் கூடுதலாக 7 மாதங்கள் போரிட வேண்டியிருக்குமென எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேல் ராணுவம்

சர்வதேசளவிலான அழுத்தத்தையும் மீறி ராஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் தொடர்புடைய படங்களும் விடியோக்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகின.

குறைந்தது 45 பேர் பலியானதும் 200-க்கும் அதிகமானோர் காயமுற்றதும் அந்த தாக்குதலில் . ராஃபாவை ஹமாஸி கடைசி கோட்டையென இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.

காஸா- எகிப்து எல்லையை முழுமையாக கைப்பற்றியுள்ள இஸ்ரேல் ராணுவம் ராஃபாவிலும் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக ராஃபாவில் ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்குவதே போரின் இறுதி கட்டமாக இருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில் இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு தற்போது வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.