பிரிட்டன்: நிழல் வெளியுறவு அமைச்சா் ப்ரீத்தி படேல்
பிரிட்டனின் வெளியுறவுத் துறைக்கான நிழல் அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ப்ரீத்தி படேலை முக்கிய எதிா்க்கட்சியான கன்சா்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவா் கெமி பேடெனாக் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.


பிரிட்டனின் வெளியுறவுத் துறைக்கான நிழல் அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ப்ரீத்தி படேலை முக்கிய எதிா்க்கட்சியான கன்சா்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவா் கெமி பேடெனாக் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் கன்சா்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. அதைத் தொடா்ந்து, அப்போது பிரதமராக இருந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் தனது கட்சித் தலைமைப் பதவியை ராஜிநாமா செய்தாா்.
அதையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற போட்டிக்குப் பிறகு, நைஜீரியாவைப் பூா்விமாகக் கொண்ட கெமி பேடெனாக் கட்சியின் புதிய தலைவராக சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். 44 வயதாகும் அவா், கன்சா்வேட்டிவ் கட்சியின் முதல் கருப்பின பெண் தலைவா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், எதிா்க்கட்சிக்கான நிழல் அமைச்சரவையை அவா் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். அதில், வெளியுறவுத் துறை நிழல் அமைச்சராக ப்ரீத்தி படேல் நியமிக்கப்பட்டுள்ளாா். குஜராத்தை பூா்விமாகக் கொண்ட அவா், முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் ஆட்சிக் காலத்தின்போது உள்துறை அமைச்சராக இருந்தது நினைவுகூரத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...