நடிகர் மேத்யூ பெர்ரி சடலமாகக் கிடந்த லாஸ் ஏஞ்சலீஸ் வீட்டை வாங்கிய இந்திய வம்சாவளி பெண்

நடிகர் மேத்யூ பெர்ரி சடலமாகக் கிடந்த லாஸ் ஏஞ்சலீஸ் வீட்டை வாங்கியிருக்கிறார் இந்திய வம்சாவளி பெண்.
பூஜை
பூஜைஇன்ஸ்டா படம்
Published on
Updated on
1 min read

அனிதா லல்லியன் என்ற இந்திய வம்சாவளிப் பெண், லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரியின் மிகப் பெரிய பங்களாவை வாங்கியிருக்கிறார்.

நடிகர் மேத்யூ பெர்ரி இந்த வீட்டில்தான் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், வீட்டில் குடிபுகுவதற்கு முன்பு, மேத்யூவின் ஆன்மா சாந்தியடைய ஒரு பூஜையையும் நடத்தி முடித்திருக்கிறார் லல்லியன்.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருபவரும், திரைப்பட தயாரிப்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அனிதா லல்லியன் 8.55 மில்லியன் டாலர் கொடுத்து இந்த பங்களாவை வாங்கியிருக்கிறார்.

வீட்டின் தோற்றம்
வீட்டின் தோற்றம்

இது குறித்து அவர் கூறுகையில், இந்த பங்களாவின் மிக ரம்மியமான அமைப்பும், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் பசிபிக் கடற்கரையின் அழகும் என்னை அதிசயவைக்கிறது. அதேவேளையில், மறைந்த நடிகரின் ஆத்மா சாந்தியடையவும் பூஜைகள் செய்யப்பட்டன. இந்த பங்களாவின் அழகில் மயங்கியதால்தான், வீட்டின் பின்னணியைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்றும், வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு, சில குறிப்பிட்ட பூஜைகளை அனிதா மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி முடித்திருக்கிறார்கள்.

இந்த வீட்டிலிருந்து பார்த்தால் பசிபிக் பெருங்கடலின் அழகிய தோற்றம் தெரிகிறது. இது என்னை வெகுவாக மயக்கியிருக்கிறது. ஒரு ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவராக நான் ஒன்றை நம்புகிறேன், ஒவ்வொரு சொத்துக்கும் பின்னணியில் ஒரு கதை இருக்கும், ஒரு வீட்டில் ஒரு சக்தி இருக்கும். அவை அனைத்தையும் வாங்குபவர்கள் அறிந்தும் இருக்கலாம் அறியாமலும் இருக்கலாம் என்றும் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com