
கடந்த ஆண்டு அக்.7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, நடத்தப்பட்டு வரும் போரின்போது எடுக்கப்படும் முடிவுகள் குறித்த தகவல்களில் மாற்றம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது விசாரணை தொடங்கியிருக்கிறது.
இஸ்ரேல் நாட்டு உச்ச நீதிமன்றத்தில், நெதன்யாகுக்கு எதிரான விசாரணை தொடங்கியிருப்பதாகவும், போர்க்கால தகவல்கள் யாருக்கும் கிடைக்கப்பெறாத வகையில் அதனை மறைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்.7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலைத் தொடங்கியது.
காஸா மற்றும் லெபனான் மீதான தாக்குதல்கள் குறித்து முக்கிய அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருடனான ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த பதிவுகளை மாற்றியதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.
சில போர்க்கால முடிவுகளை மறைத்திருப்பது, மற்றும் மாற்றியிருப்பது, வெளிப்படைத்தன்மை குறித்த கவலைகளை பாதுகாப்பு அதிகாரிகளிடையே எழுப்பியிருக்கிறது.
மேலும், போர்க்கால முடிவுகள் மற்றும் அதிகாரிகள், அமைச்சர்களுடனான தொடர்புகள் பலவும் யாருக்கும் கிடைக்காத வகையில் அழிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போா் 11 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
அதேவேளையில் இஸ்ரேலும் லெபனானும் எல்லையைப் பகிா்ந்து வரும் நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா். இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மறுபக்கம் ஏவுகணை தாக்குதல்களையும் எதிர்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.