சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் இரங்கல்

மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் உள்பட பலரும் இரங்கல்

News image
தீ விபத்து ஏற்பட்ட முதியோர் இல்லத்தின் முன் காவல்துறையினர்
Updated On :15 நவம்பர் 2024, 11:17 am

DIN

ஸ்பெயின் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயினில் சரகோஸாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 15) அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரப் போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டும், மருத்துவமனைக்குள் இருந்த 10 பேர் பலியாகினர்.

தீ விபத்தையடுத்து, உள்ளிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்தையடுத்து, உள்ளிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து, தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் உள்பட பலரும் இரங்கலும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலும் தெரிவித்தனர். மேலும், அரசு நிகழ்ச்சிகளும் இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டன.

சமீபத்தில் ஸ்பெயினில் உள்ள வலென்சியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சுமார் 200 பேர் வரையில் பலியாகியிருந்தனர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்த நிலையில், சரகோஸாவில் ஏற்பட்ட தீ விபத்து மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.