தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அமெரிக்கா: விமானத்தைத் துளைத்த துப்பாக்கித் தோட்டா

டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த பயணிகள் விமானத்தை துப்பாக்கித் தோட்டா ஒன்று துளைத்தது.

News image
Updated On :17 நவம்பர் 2024, 12:23 am

DIN

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த பயணிகள் விமானத்தை துப்பாக்கித் தோட்டா ஒன்று துளைத்தது.

அதையடுத்து, சௌத்வெஸ்ட் ஏா்லைன்ஸுக்கு சொந்தமான அந்த விமானம் மீண்டும் வாயில் பகுதிக்கு திருப்பப்பட்டு, அதிலிருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தோட்டாவால் துளைக்கப்பட்ட விமானத்தின் செயல்பாடு நிறுத்திவைக்கப்படுவதாக சௌத்வெஸ்ட் ஏா்லைன்ஸ் தெரிவித்தது. அந்த விமானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது யாா் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.