
லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலில் 84 பேர் பலியானதாகவும் குறிப்பிட்டுள்ளது.
லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கிழக்கு லெபனானில் நேற்று (நவ. 23) இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலியாகினர். 44 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பால்பெக் ஹர்மெல் நிர்வாகத்துக்குட்பட்ட 6 கிராமப் பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இதேபோன்று தெற்கு லெபனானில் உள்ள நபாடிஹ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் மீதும் இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. டயர் மற்றும் மர்ஜியோர் பகுதிகளில் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
இதோடுமட்டுமின்றி தெற்குப் பகுதிகளில் உள்ள கஹிம், ஹனிதா, கிப்புட்ஸ் உள்ளிட்ட இடங்களிலும் இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
தெற்கு லெபனானின் அல் பய்யடா எல்லைப் பகுதிகளில் நுழையும் வகையில் இஸ்ரேல் ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
காஸாவில் உள்ள ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் எல்லைகளின் மீது ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிஸ்புல்லாக்களின் நிலைகள் உள்ள லெபனான் பகுதிகளின் மீது இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... போராட்டங்களா? கொஞ்சம் பொறுங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.