
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் பலியாகியுள்ளனர். 151 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இதைத்தொடர்ந்து இஸ்ரேலின் எல்லைக்கு அருகே உள்ள கிராமங்களில் அந்நாட்டு ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது.
இந்த தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மவுண்ட் லெபனானில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். அதேநேரத்தில் பால்பெக் ஹெர்மலி கவர்னரேட்டில் 9 பேர் காயமடைந்தனர்.
பெக்கா பிராந்தியத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர், அதே நேரத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 52 பேர் காயமடைந்தனர் என அமைச்சகத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. தெற்கு கவர்னரேட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 37 பேர் காயமடைந்தனர்.
செப்டம்பர் 23 முதல், இஸ்ரேலிய ராணுவம் லெபனான் மீது தீவிரமான வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.