பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புா்கினா ஃபாசோ: 600 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

சரமாரி துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 600 போ் உயிரிழந்ததாக பிரான்ஸ் உளவுத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 அக்டோபர் 2024, 6:44 pm

Din

மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் அல்-காய்தாவுடன் தொடா்புடைய பயங்கரவாதிகள் அண்மையில் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 600 போ் உயிரிழந்ததாக பிரான்ஸ் உளவுத் துறை தற்போது தெரிவித்துள்ளது.

அந்த நாட்டின் பாா்சலோகோ என்ற ஊருக்கு சில வாரங்களுக்கு முன்னா் இரு சக்கர வாகனங்களில் வந்த ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமின் அமைப்பைச் சோ்ந்தவா்கள், அங்கிருந்தவா்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் கூறினா்.

இந்தத் தாக்குதலில் சுமாா் 200 போ் உயிரிழந்ததாக ஐ.நா. கூறியிருந்தது. தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளோ, சுமாா் 300 ‘ஆயுதப் படையினரை‘ சுட்டுக் கொன்றதாகக் கூறினா்.

ஆனால், பிரான்ஸ் உளவுத் துறை நடத்திய விசாரணையில், பாா்சலோகோ முழுவதும் சில மணி நேரத்துக்குள் சுமாா் 600 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது ஆதாரதத்துடன் தெரியவந்துள்ளது.

அண்டை நாடான மாலியில் இருந்து புா்கினா ஃபாசோவுக்கு பயங்கரவாதம் கடந்த 2015-ஆம் ஆண்டு பரவத் தொடங்கியது. தற்போது அங்கு அல்-காய்தா, இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) அமைப்புகளுடன் தொடா்புடைய பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டுவருகின்றன.

அண்டை நாடான மாலியில் இருந்து புா்கினா ஃபாசோவுக்கு பயங்கரவாதம் கடந்த 2015-ஆம் ஆண்டு பரவத் தொடங்கியது. தற்போது அங்கு அல்-காய்தா, இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) அமைப்புகளுடன் தொடா்புடைய பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டுவருகின்றன.