மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

துணி துவைத்து, சமையல் செய்து, வீட்டை சுத்தப்படுத்திய திருடன்!

பிரிட்டனில் திருடன் ஒருவன் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து துணிகளைத் துவைத்து, சமையல் செய்து, வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

News image
திருடன் டாமியன் வோஜ்னிலாவிச்
Updated On :7 அக்டோபர் 2024, 8:36 am

DIN

பிரிட்டனில் திருடன் ஒருவன் வீட்டிற்குள் புகுந்து துணிகளைத் துவைத்து, வீட்டு உரிமையாளருக்கு சமையல் செய்து, வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரிட்டன் மன்மவுத்ஷிரைச் சேர்ந்த திருடனான டாமியன் வோஜ்னிலாவிச் (36) கடந்த ஜூலை 16 அன்று ஒரு பெண்ணின் வீட்டிற்கு திருடுவதற்காகச் சென்றுள்ளான். அப்போது வீட்டை சுத்தம் செய்து, அந்தப் பெண்ணின் துணிகளைத் துவைத்து காயவைத்துள்ளான்.

அதுமட்டுமின்றி அந்தப் பெண்ணின் வீட்டிற்கு மளிகை சாமான்கள் வாங்கி, அதனை குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்து, அங்கிருந்த பறவைகளுக்கு தீவனம் வைத்துள்ளான்.

மேலும், பாத்திரங்களை விலக்கி, வீட்டை நன்றாக சுத்தம் செய்த பின்னர், அந்த பெண்ணுக்காக சமையம் செய்து, ரேக்கில் ஒரு மது பாட்டிலை வைத்து, ’கவலைப்படாதே, மகிழ்ச்சியாக இரு, நன்றாக சாப்பிடு’ என்று குறிப்பு எழுதி வைத்துவிட்டு வைத்து சென்றுள்ளான்.

அந்தப் பெண் வீட்டிற்கு திரும்பியபோது ஒரு புதிய வைன் பாட்டிலும், அதன் அருகில் ஒரு கிளாஸ், பாட்டில் திறக்கும் கருவியுடன் ஒரு கிண்ணம் முழுக்க இனிப்புகள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ஒரு நபர் துணி துவைத்து காயவைத்ததைக் கண்டதாக அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் மனரீதியாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தன் வீட்டில் தங்குவதற்கு பயமாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், தான் இதுவரை அனுபவிக்காத அளவுக்கு அதிகமான பதட்டத்தில் வாழ்ந்ததாகவும், இந்த சம்பவம் தொடரும் தொல்லையாக மாறுமோ என பயந்ததாகவும் அவர் கூறினார்.

மாட்டிக்கொண்ட திருடன்

டாமியன் இதேபோல கடந்த ஜூலை 29 அன்று மற்றொரு வீட்டில் திருடச் சென்றபோது மாட்டிக்கொண்டான். ஆளில்லாத அந்த வீட்டில் குளித்துவிட்டு தன் துணிகளைத் துவைத்துள்ளான். பின்னர் உணவு உண்டு மது அருந்திவிட்டு போதையில் இருந்தபோது, வீட்டு உரிமையாளர் சிசிடிவி கேமராவில் வீட்டில் திருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக தனது மருமகனை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த திருடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளான்.

உரிமையாளர் உடனடியாக காவல்துறையினரை வரவழைத்து திருடன் டாமியனை அவர்களிடம் பிடித்துக் கொடுத்துள்ளார்.

22 மாதம் சிறை தண்டனை

வீடில்லாத அந்தத் திருடன் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வந்ததால் இவ்வாறு திருட்டு முயற்சியில் அவ்வப்போது ஈடுபட்டதாக அவரது வக்கீல் தெரிவித்தார்.

ஆனால், மற்றவர்களின் வீடுகளுக்குள் இவ்வாறு அனுமதியின்றி நுழைவது குற்றமென்று அறிவித்த நீதிபதி, குற்றவாளி மீது ஏற்கனவே இருந்த தாக்குதல், பொது ஒழுங்கு மீறல் குற்றங்கள், விசாரணைக்கு ஆஜராகாதது உள்ளிட்ட வழக்குகளையும் விசாரித்து குற்றவாளிக்கு 22 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி கடந்த அக். 3 அன்று உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.