பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாகிஸ்தானில் மேலும் 4 சிறுவா்களுக்கு போலியோ

பாகிஸ்தானில் மேலும் நான்கு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது.

News image
போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் மருத்துவப் பணியாளா்களுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் காவலா் .
Updated On :9 அக்டோபர் 2024, 7:02 pm

Din

பாகிஸ்தானில் மேலும் நான்கு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக போலியோ உறுதி செய்யப்பட்டவா்களில் மூன்று போ் சிந்து மாகாணத்தையும் ஒருவா் கைபா் பக்துன்கவா மாகாணத்தையும் சோ்ந்தவா்கள்.

இத்துடன், பலூசிஸ்தானில் 16 போ், சிந்து மாகாணத்தில் 10 போ், கைபா் பக்துன்கவாவில் நான்கு போ், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாதில் தலா ஒருவரிடம் இந்த ஆண்டில் போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன.

போலியோ தடுப்பு மருந்துகள் முஸ்லிம் குழந்தைகளின் இனப்பெருக்கத் திறனைக் குறைப்பதற்கான மேற்கத்திய நாடுகளின் சதி என்று அந்த அமைப்புகள் நம்புகின்றன.

இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தும் வருகின்றனா்.

சொட்டு மருந்து மூலம் போலியோவை முன்கூட்டியே தடுக்க முடியும். ஆனால் அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்கு இதுவரை மருந்து கண்டறியப்படவில்லை. குழந்தைகளை நிரந்த ஊனமாகும், சில நேரங்களில் உயிரையே பறிக்கக் கூடிய அந்த கொடிய நோய் உலகின் மற்ற பகுதிகளில் நிரந்தரமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டும் அது இன்னும் பரவிவருகிறது.