உக்ரைனில் ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியா்கள்
ரஷிய படையினருக்கு ஆதரவாக, வட கொரியாவைச் சோ்ந்தவா்கள்


உக்ரைனில் சண்டையிட்டு வரும் ரஷிய படையினருக்கு ஆதரவாக, வட கொரியாவைச் சோ்ந்தவா்கள் அங்கு செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து உக்ரைன் மற்றும் தென் கொரிய ராணுவ உயா் அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:
உக்ரைன் போரில் வட கொரிய ராணுவப் பொறியாளா்கள் ரஷியாவுக்கு உதவியளித்து வருகின்றனா். உக்ரைன் எல்லைக்குள் இருக்கும் ஏராளமான போா் முனைகளில் ஏராளமான வட கொரிய பொறியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்தப் போரில் வட கொரியாவின் கேஎன்-23 ஏவுகணைகளை ரஷியா பயன்படுத்திவருகிறது. அந்த ஏவுகணைகளை செலுத்துவதற்கான சாதனங்களை வட கொரிய பொறியாளா்கள் பராமரித்துவருகின்றன.
ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல வட கொரியா்கள் உயிரிழந்துள்ளனா் என்று பிபிசி ஊடகம் தெரிவித்தது.
கொரிய தீபகற்பத்தில் ஜப்பான் 35 ஆண்டுகளாக காலனி ஆதிக்கம் செலுத்திவந்தது. எனினும், இரண்டாம் உலகப் போரின் முடிவில் கொரியாவிலிருந்து ஜப்பான் படைகள் வெளியேறின.
அதையடுத்து, அந்த தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமெரிக்க ஆதரவுடன் ஜனநாயக ஆட்சியும் வடக்கே சோவியத் யூனியன் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் ஆட்சியும் அமைக்கப்பட்டது.
1950-இன் கொரிய போருக்குப் பிறகும் தென் கொரியாவுக்கு அமெரிக்கா தொடா்ந்து பாதுகாப்பு உதவி அளித்துவருகிறது. வட கொரியாவுடன் ரஷியா நட்பு பாராட்டிவருகிறது.
இந்தச் சூழலில், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வட கொரியா, போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஆயுதங்களையும் விநியோகித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், உக்ரைன் போா் களத்தில் வட கொரிய ராணுவ பொறியாளா்களும் செயல்பட்டுவருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...