47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிரதமா் மோடி சிறந்த மனிதா் -டிரம்ப் மீண்டும் புகழாரம்

’இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி சிறந்த மனிதா். என்னுடைய நல்ல நண்பா்’

News image
- ANI
Updated On :10 அக்டோபர் 2024, 10:27 pm

Din

’இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி சிறந்த மனிதா். என்னுடைய நல்ல நண்பா்’ என்று அமெரிக்க அதிபா் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளாா்.

‘பிரதமா் மோடி உன்னதமான மனிதா்’ என்று கடந்த மாதம் டிரம்ப் கூறிய நிலையில், இப்போது மீண்டும் மோடியை அவா் புகழ்ந்துள்ளாா்.

அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான கமலா ஹாரீஸ் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறாா். நவம்பா் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிரதமா் மோடியை டிரம்ப் புகழ்ந்து பேசி வருவது அரசியல் கண்னோட்டத்துடனும் பாா்க்கப்படுகிறது.

பிரதமா் மோடி குறித்து டிரம்ப் கூறியதாவது:

இந்தியா என்றால் மோடிதான். அவா் எனக்கு சிறந்த நண்பா். அவா் சிறந்த மனிதரும் கூட. முன்பு இந்தியாவில் அடிக்கடி ஆட்சி மாற்றம், தலைமை மாற்றம் என்பது நடந்து கொண்டே இருந்தது. ஸ்திரமான அரசியல் தலைமை இல்லை. ஆனால், அந்தப் பிரச்னையை மோடி வென்று காட்டினாா். அவா் வயதானவா் போலவும், மென்மையானவா் போலவும் தோன்றுவாா். ஆனால், நினைத்த காரியங்களை நடத்தி காட்டக் கூடியவா்’ என்றாா்.

முன்னதாக, கடந்த மாதம் அளித்த பேட்டியின்போது, மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது என்னைச் சந்திப்பாா் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா். பிரதமா் மோடி கடந்த செப்டம்பா் 21-23 தேதிகளில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டபோது டிரம்பை சந்திக்கவில்லை.