தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

வங்கதேச காளி கோயிலில் பிரதமர் மோடி கொடுத்த தங்கக் கிரீடம் திருட்டு

வங்கதேச நாட்டில் உள்ள காளி கோயிலில் பிரதமர் மோடி கொடுத்த தங்கக் கிரீடம் திருடுப்போனது.

News image

வங்கதேசம்: காளி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி - கோப்புப்படம்

Updated On :11 அக்டோபர் 2024, 10:58 am

வங்கதேசத்தில் அமைந்துள்ள ஜேஷோரேஸ்வரி காளி கோயிலுக்கு, இந்திய நாட்டின் பரிசாக, பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்ட தங்கக் கிரீடம் திருடப்போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழக்கிழமை கோயிலில் பூஜை செய்துவிட்டு, பூட்டிச்சென்ற நிலையில், இன்று காலை கோயிலில், சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு இருந்த தங்கத்தால் ஆன கிரீடம் திருடப்பட்டிருப்பதை அறிந்த கோயில் அர்ச்சகர் காவல்துறையினருக்குப் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், கோயிலில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், கிரீடத்தை ஒருவர் திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் பற்றி விரைவிக விசாரணை நடத்தும்படி இந்தியா தரப்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோயிலின் கருவறைக்குள் நுழையும் ஒருவர், காளியின் தலையில் இருந்த கிரீடத்தை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வெளியேறுவது சிசிடிவில் பதிவாகியுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

கடந்த 2021ஆம் ஆண்டு, வங்கதேசத்துக்கு அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தபோது காளி கோயிலுக்கு இந்த தங்கக் கிரீடத்தை பரிசாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.